×

மூதாட்டியை மிதித்து கொன்ற யானை உள்பட 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனத்திற்கு விரட்டியடிப்பு

ஓசூர்: ஓசூரில் அட்டகாசம் செய்து வந்த 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன. இதில் 9 யானைகள் நேற்று பிரிந்து நாயன்கொட்டாய் அக்ரஹாரம், தாதாபுரம், தொரப்பள்ளி, குடிசாதனபள்ளி ஆகிய பகுதிகளில் புகுந்து அங்கு பயிரிட்ட ராகி மற்றும் நெற்பயிர்களை நாசப்படுத்தி சென்றன. மேலும், அதிகாலை 9 யானைகளில் 8 யானைகள் போடூர்பள்ளத்திற்கு சென்றது. ஒரு யானை மட்டும் 7 மணி வரை தனியாக சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு விறகு எடுக்க வந்த வெங்கடலட்சுமி என்ற மூதாட்டியை ஒற்றை யானை மிதித்து கொன்றது.

இந்நிலையில் ஒற்றை யானையை விரட்டியடிக்க வேண்டும் என கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் போடூர்பள்ளம், சானமாவு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை மற்றும் 60 யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : forest ,death ,toddler , Muthathi, Elephant, Thenkkanikottai, Rushing
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ