×

போடி அருகே திறந்தவெளி கிணறுகளால் ஆபத்து: பலிக்கு முன் நடவடிக்கை தேவை

போடி: போடி அருகே இரு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் திறந்த நிலையில் கிணறுகள் உள்ளதால் ஆபத்து காத்திருக்கிறது. எனவே, பலிக்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி உள்ளது. இங்கு கீழ சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி, தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி, கிருஷ்ணா நகர் என உட்கிடை கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மேலசொக்கநாதபுரம் அருகே கீழ சொக்கநாதபுரம் விலக்கில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 100 அடி ஆழத்தில் தண்ணீரின்றி பெரிய கிணறு ஆபத்தான நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ளது.

இதே போல ரெங்கநாதபுரம் அடுத்துள்ள கிருஷ்ணா நகரிலும் சுமார் 200 அடி ஆழம் கொண்ட பெரிய கிணறு ஆபத்தான நிலை யில் பயன்பாடின்றி உள்ளது. இதில் கிருஷ்னாநகர் பகுதி மக்கள் குப்பையை கொட்டி வருவதால் தொற்றுநோய் உருவாகி வருகிறது. இந்த இரு கிணறுகளும் குடியிருப்புகளில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றன்ர. கிருஷ்ணா நகர் கிணற்றில் மழை நீர் தேங்கியிருந்த போது கடந்தாண்டுகளில் 3 பேர் குளிக்க உள்ளே குதித்து வெளியே வர முடியாமல் பரிதாபமாக மூழ்கி இறந்து போயினர். எனவே, பயன்பாடின்றி திறந்த வெளியில் உள்ள இந்த கிணறுகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : wells ,Bodi ,sacrifice , Bodhi, open space well, danger
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது