பேரணாம்பட்டு அருகே 4வது நாளாக 16 யானைகள் அட்டகாசம் விவசாய பயிர்கள் சேதம்: அச்சத்தில் கிராமமக்கள்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே தொடர்ந்து 4வது நாளாக முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் விவசாய பயிர்கள் சேதமடைந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் 7 யானைகள் கடந்த 23ம் தேதி முதல் அட்டகாசம் செய்து வந்தன. இவை கடந்த 4 நாட்களாக பேரணாம்பட்டு பகுதியில் புகுந்துள்ளது. எருக்கம்பட்டு கிராமத்தில் கடந்த 30ம் தேதி இரவு அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்துக்குள் நேற்று அதிகாலை 16 காட்டு யானைகள் புகுந்தது. கரும்பு தோட்டங்கள், மிளகாய்ச்செடி, வாழை மரங்களை யானைக் கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories:

>