×

மோசமான பொருளாதார சரிவு முக்கிய துறைகள் வளர்ச்சி 4வது மாதமாக வீழ்ச்சி

புதுடெல்லி: நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, தொடர்ந்து 4வது மாதமாக கடந்த நவம்பரிலும் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சத்திகரிப்பு பொருட்கள், உரம் ஆகியவை நாட்டின் முக்கிய 8 துறைகளாக உள்ளன. தொழில்துறை உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது.தொழில் துறைகள் முடங்கியதால் கடந்த செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக சரிந்து விட்டது. இது கடந்த ஆறரை ஆண்டில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இத்தகைய அவல நிலையின் தொடர்ச்சியாக, முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த நவம்பரில் 1.5 சதவீதம் சரிந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நிலக்கரி 2.5%, கச்சா எண்ணெய் 6%, இயற்கை எரிவாயு 6.4%, ஸ்டீல் 3.7%, மின் உற்பத்தி 5.7% சரிவை சந்தித்துள்ளது. சுத்திகரிப்பு, உரம் உற்பத்தி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை முக்கிய துறைகளில் முன்னேற்றம் என்பதே இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தி 2018 நவம்பரில் இருந்தும், இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்தும்நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டு ஜூலையில் இருந்தும் சரிவை சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு தூணாக உள்ள தொழில் துறைகளில் நீடிக்கும் உற்பத்தி சரிவு தொழில்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : downturn , Growth ,major sectors,worst economic downturn, fell ,4th month
× RELATED மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத...