×

ராமேஸ்வரம்-ஐதராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

மதுரை: ராமேஸ்வரம்-ஐதராபாத் இடையே இம்மாதம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கை: ராமேஸ்வரம்-ஐதராபாத் இடையே இம்மாத (2020, ஜனவரி) ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் (ஜன. 5, 12, 19, 26) சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண் 07686) ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த சிறப்பு கட்டண சிறப்பு ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மெண்ட், காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், மிரிலகுட, நல்கொண்டா மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கு தற்ேபாது முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Rameshwaram ,Hyderabad ,Rameswaram ,Railway , Rameswaram, Hyderabad, Railway
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...