×

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம்: தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி

டெல்லி: மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம் என மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திய தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி அளித்துள்ளார். நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இதற்கு முன்பு வகித்து வந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். பிபின் ராவத் வகித்துவந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே பதவியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மனோஜ் முகுந்த் நரவானே இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ராணுவ துணைத் தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவானே இந்தியாவின் 28 ஆவது ராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திய தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி அளித்தார். அவர் பேசியதாவது; ராணுவ தளபதியாக எனது கடமையை செய்ய தைரியத்தையும், பலத்தையும் வழங்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன். அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து சூழ்நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்போம். மனித உரிமைளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம். சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்க படைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஜெனரல் நரவானே தெரிவித்தார்.

Tags : Manoj Mukund Naravan ,National War Memorial , Human Rights, Attention, National War Memorial, Interview with Manoj Mukund Naravan
× RELATED டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்...