×

சிதம்பரம் நகை தொழிலாளி அசத்தல் 660 மில்லி கிராம் தங்கத்தில் மாத காலண்டர் தயாரிப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகை பட்டறை வைத்திருப்பவர் முத்துக்குமரன்(42). இவர் இந்த ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரை ஒரு கிராமுக்கும் குறைவாக, அதாவது 660 மில்லி கிராம் தங்கத்தில், 18 மில்லி மீட்டர் உயரமும், 12 மில்லி மீட்டர் அகலமும் கொண்டு, 12 மாதத்துக்கும் 12 தாள்கள் வீதம் தங்கத்திலேயே காலண்டரை வடிவமைத்துள்ளார். இந்த தங்க காலண்டரில்  ஒவ்வொரு மாதங்களிலும் தினசரி தேதி, கிழமையும் முக்கிய பண்டிகை தினங்களை எழுத்தாலும் வடிவமைத்துள்ளார். கை விரலில் வைத்து பூதக்கண்ணாடியால் பார்க்கும் வகையில் மிகச் சிறிய அளவில்  இந்த காலண்டர் உள்ளது.

Tags : Chidambaram Jewelry Worker , Chidambaram, Jewelry Worker Assalamu, 660 milligrams of gold, monthly calendar, product
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...