×

முத்தலாக் சட்டத்தின் கீழ் கணவர் மீது நடவடிக்கை கோரி பெண் பரபரப்பு புகார்: கமிஷனர் அலுவலகத்தில் மனு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சர்தாஜ்பேகம் என்பவர் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.  இந்நிலையில் வேலூரை ேசர்ந்த சையத் இப்ராஹிம் என் குடும்பத்தினருடன் பேசி என்னை கடந்த 2014 ஆண்டு திருமணம்  என்ற நிக்காஹ் முடித்தார். ஒரே வீட்டில் நாங்கள் மூன்று ஆண்டுகள்  வாழ்ந்து வந்தோம். என்னுடைய குழந்தைகளின் கல்விக்காக வைத்திருந்த ₹4 லட்சம் பணத்தை வாங்கி கொண்டார். பிறகு நான் பணத்தை திரும்ப கேட்ட போது, வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார்.

இதற்கிடையே ஒரு நாள் வீட்டிற்கு வந்த சையத் இப்ராஹிம் உனக்கு மூன்று தலாக் கொடுக்கிறேன் என்றார். இஸ்லாமிய முறைக்கு எதிராக எப்படி இப்படி மூன்று தலாக் கொடுக்க முடியும் அதுவும் ஒரே நேரத்தில் என்று கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தற்போது சையத் இப்ராஹிம் பாஜக தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, முத்தலாக் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட சையத் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Office ,Husband Under Muthalak Act: Petition to Commissioner , husband, the woman, demanding action, complained , sensationalism
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...