×

வாழப்பாடியில் பரபரப்பு பாஜ பிரமுகர் மண்டையை உடைத்த அதிமுகவினர்

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர்பட்டி ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணியில், அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்நிலையில், அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவை சேர்ந்த வரதன் என்பவர், தனது மனைவி ராஜலட்சுமியை சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். அத்தனூர்பட்டி பள்ளியில், நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்தது. பகல் 11.30 மணியளவில், வாக்குச்சாவடி அருகே அதிமுக தரப்பினர், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.

அப்போது, அங்கு வந்த பாஜ பிரமுகர் வரதன், தனது மனைவிக்கு ஆதரவாக வாக்காளர்களிடம் ராந்தல் லைட்டு சின்னத்திற்கு வாக்கு கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அதிமுக தரப்பினர், வரதனை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து துரத்தி அடித்தனர். அப்போது, குளிர்பான பாட்டிலால் வரதனின் தலையில் அடித்துள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வரதனின் உறவினர்கள் வந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Vaibhavadyil Parabaja ,Bajamakkal Vaikkal ,Vaikkal Vaikkadyam , broke the skull
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது