×

மரபணு மாற்ற ஆய்வில் ஈடுபட்ட 3 விஞ்ஞானிகளுக்கு சிறை தண்டனை: சீனா நீதிமன்றம் அதிரடி

பிஜீங்: மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டை குழந்தை பிறந்த நிலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சீன நீதிமன்றம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் ஹீ ஜினாய்குய் என்பவர் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தமது குழுவினர் மனித மரபணு மாற்ற ஆய்வு மேற்கொண்டதாக கூறியிருந்தார். இந்த ஆய்வில், கருத்தரித்தல் வெற்றி பெற்று ஒரே மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அறிவித்தார். அவரது அறிவிப்பானது சர்வதேச அளவில் ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி கிருமியை எதிர்கொள்ளக்கூடிய மரபணுவை உருவாக்குவதற்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டதாக ஹீ ஜினாய்குய் தெரிவித்திருந்தார். இந்த குழுவில் ஹினாய்குயுடன் சிஹாங் ரென்லி மற்றும்  கின் ஜின்சோ ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் இவர்கள் முறையாக மருத்துவம் பயிலாமல் சட்டவிரோதமாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘3 ஆராய்ச்சியாளர்களும் மருத்துவருக்கான தகுதியை பெற்றிருக்கவில்லை. இவர்கள் புகழ் மற்றும் லாப நோக்கத்துடன் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர். ஆராய்ச்சி குறித்த சீனாவின் விதிமுறைகளை மீறியுள்ளனர். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவம் இரண்டிலுமே இவர்கள் உரிய நெறிமுறைகளை பின்பற்றவில்லை” என்று தெரிவித்தது.
மேலும்  அரசின் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஹீ ஜினாய்குய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் 4.30 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவருக்கு உதவி புரிந்த சிஹாங் ரென்லிக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் கின் ஜின்சோவிற்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : scientists ,China , Genetic Study, 3 Scientists, Jail, China Court
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு