×

பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்: மஞ்சள் செடிகளும் அறுவடைக்கு தயார்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பானைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையை, பானையில் பொங்கலிட்டு படையல் செய்து கொண்டாடுவர். இதற்காக அருகில் உள்ள ஏரியில் நிர்வாக அனுமதி பெற்று களிமண் எடுத்துவந்த சிறிய, பெரிய, நடுத்தரமான பானைகளை தொழிலாளர்கள் செய்து நெருப்பில் சுட்டு விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இதில் சிறிய பானை முதல் இரட்டை அடுப்புகள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் சமையல் மண்பாண்டங்களை தயாரித்து வருகின்றனர். பானையில் மஞ்சள் செடி கட்டி பொங்கலிடுவது வழக்கம் என்பதால், பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் தற்போது அறுவடைக்காக தயாராக உள்ளது.

Tags : plants ,Pongal Pottery , Pongal, pot
× RELATED பீட்ரூட் கீரை மசியல்