×

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் உயிரிழப்பு விவகாரம்: வழக்கு மாற்றப்பட்டு 15 நாட்களுக்கு பின் விசாரணையை தொடங்கியது சிபிஐ!

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சிபிஐ தற்போது தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ஐஐடி மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பியது. ஏற்கெனவே கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இது சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணையில் இறங்கி விசாரணை மேற்கொண்டதையடுத்து விசாரனை மத்தியக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் முறையிட்டிருந்தார். மேலும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை விவகாரம் அனைத்தையுமே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 15ம் தேதியன்று, பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சிபிஐ இந்த வழக்கை ஏற்று விசாரிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ தற்போது விசாரணைக்கு ஏற்றுள்ளது. முறைப்படி வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கடையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகளை சந்தித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Fatima Latif ,IIT ,Madhya Pradesh ,investigation ,CBI , Chennai, IIT, Fatima , CBI, Investigation
× RELATED சர்வதேச விண்வெளி மையத்தில்...