×

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட வீடு, மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றம்!

புதுடெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட வீடு, மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் பட்டியாலா என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையால் இறந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அந்த வீட்டை விற்க ஓர் உறவினர் முடிவெடுத்தார். ஆனால், யாரும் வாங்க முன்வராததால் வீடு தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நோய்களைப் பற்றி ஆராயும் பணியில் உள்ள மோகித் சிங் என்பவர் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அந்த வீட்டிற்குள் குடியேறியுள்ளார். வீட்டின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ள மோகன், கீழ் தளத்தை மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். பேய்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தம் குடும்பம் தங்க இந்த வீடு அருமையானது என்றும் 45 வயது மோகன் கூறினார். இதற்கு முன்னர் அந்த வீட்டில் வாடகைக்குத் தங்கிய சிலர், ஒரு வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Delhi ,house ,Bhatia ,Burari , Delhi, Burari, Suicide, house ,diagnostic centre
× RELATED டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை..!!