×

முத்தலாக்கால் பாதித்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.முத்தலாக் சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்நிலையில், முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சமீபத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து தங்கள் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்  என்று கோரிக்ைக விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் அப்போது உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், அவர்களின் மறுவாழ்வுக்காக  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதுதவிர, மாநில அரசின்  இலவச சட்ட உதவியும் அவர்களுக்கு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட மற்ற மதத்தை சேர்ந்த பெண்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிதியுதவியை  பெறுவதற்கு நீதிமன்ற வழக்கு ஆவண நகல் மற்றும் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை நகலை அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Yogi Adityanath ,women ,Mutalaka ,Muthalak ,UP Announcement , 6,000 per annum for women affected by Mutalaka: UP Announcement of Chief Minister Yogi Adityanath
× RELATED மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...