×

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளில் 3ம் பருவ பாடப்புத்தகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளே 3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், `அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும். தேர்வு விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே 3ம் பருவ புத்தகம் அனைவருக்கும் வழங்கப்படும்’ என்றார்.

Tags : Sengottaiyan ,school ,exam vacation ,Minister Chenkottayan ,Vacation , Half Year Examination, Vacation, First Day, 3rd Seasonal Textbook, Interview with Minister Chenkottayan
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்