×

வாய்பேச முடியாத சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: 15 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்கு மகிளா கோர்ட் உத்தரவு

புதுக்கோட்டை: 17 வயது வாய்பேச முடியாத சிறுமியை பாலியல் தொந்தரவு  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 15 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தரவேண்டும் என்றும் புதுக்கோட்டை மகிளா கோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 17 வயது வாய்பேச முடியாத சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வீரையா என்ற பொட்டையன் (40) என்பவர் கடந்த 8.1.18ல்  பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மற்றும் எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வீரையா என்ற பொட்டையனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு  15 லட்சம் நஷ்டஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : plaintiff ,prison , Inappropriate, sexual harassment , girl, plaintiff, 10 years in prison
× RELATED வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்...