×

சபரிமலையில் இன்று நடை அடைப்பு வெறிச்சோடியது நிலக்கல் பார்க்கிங்

கம்பம் : சபரிமலையில் இன்று நடை அடைக்கப்படுவதால் நிலக்கல் பார்க்கிங் வெறிச்சோடி காணப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பம்பையில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பக்தர்கள் நடந்தே சன்னிதானம் சென்றனர். நிறைவு நாளான இன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

மீண்டும் டிச. 30ம் தேதி மாலை 5 மணி அளவில் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படுகிறது. ஜன. 20ம் தேதி மாலை படி பூஜையுடன் இந்த வருடத்தின் சபரிமலை சீசன் நிறைவடைகிறது. மண்டல பூஜை நிறைவடைந்ததாலும், நடை சாத்தப்படுவதாலும் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. நேற்று சூரியகிரகணம் என்பதால் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், தமிழக பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தும் நிலக்கல் பார்க்கிங் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : landfill ,Sabarimala ,Devotees , Nilakkal ,Sabarimalai ,Lord Ayyappan,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...