×

புதுச்சேரி அரசின் பாண்லே பால் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் பாதிப்பு


புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனத்தின் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. குறும்பாபட்டில் இயங்கி வரும் புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் மூலம் காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் சாரங்கபாணியின்  நிர்வாக சீர்கேட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் அவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி 3ல் 1 பங்கு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பால் விநியோகம்  முடங்கியது. இந்த நிலையில் அங்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த எம்எல்ஏவை ஊழியர்கள் அங்கிருந்து துரத்தினர். இதையடுத்து கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் வரும் 4ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 5 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பால் விநியோகம் செய்யப்பட்டது.


Tags : panchayat workers ,government ,Puducherry ,state , Puducherry, Panley, Milk, Production, Distribution, Impact, Staff, Struggle
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு