×

புதுச்சேரி பல்கலை விழாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு அவமதிப்பு: தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய மாணவியை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதித்ததற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்(விசிக தலைவர்): புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கிய விழாவில், பட்டமும் தங்கப்பதக்கமும் பெறுவதற்காக அந்த அரங்கில் அமர்ந்திருந்த முஸ்லிம் மாணவி அவமதிக்கப்பட்டிருக்கிறார். முதுகலை மக்கள் தொடர்பியல் துறை மாணவியான ரபிகாவை, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே திடீரென அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி ஒரு அறையில் தடுத்து வைத்துள்ளனர். ஹிஜாப் அணிந்திருந்ததால், மத அடிப்படையில் தான் இஸ்லாமிய மாணவி ரபிகா பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதோடு குடியரசுத் தலைவரிடமிருந்து பட்டமும் பதக்கமும் பெறுவதற்கு அவருக்கு  அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த மதவெறி நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது போன்று, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதிவெறி மதவெறி வன்கொடுமைகளுக்கு  அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மதத்தின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட மாணவி ரபிகாவை அழைத்து அவரே தங்கப்பதக்கத்தை வழங்கி வாழ்த்த வேண்டும்.நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்): ரபிகா வெளியேற்றத்துக்கு காரணம் அவர் தலையில் அணிந்திருந்த ஹிஜாப் தான் என கூறப்படுகிறது. இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இது நிகழ்ந்துள்ளது. இத்தகைய பாசிச சிந்தனை கண்டிக்கத்தக்கது. குடியரசு தலைவர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணைவேந்தரின் கண்காணிப்பிலேயே நடைபெற்றிருக்கும் சூழலிலும், மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி இஸ்லாமிய அடையாளத்துடன் இருந்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட நிகழ்வு குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

Tags : student ,Puducherry University Hijab ,leaders , Puducherry University, Hijab, Student
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...