×

மோப்ப நாய் உதவியால் 3 மணி நேரத்தில் பிடிபட்ட கொள்ளையன்

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் அசத்தி முத்தன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (24). போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது. வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோ மட்டும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கார்த்திக் ஐஸ்அவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் அர்ஜூன் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது மோப்ப நாய் அர்ஜூன் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று நின்று கொண்டு கத்தியது. உடனே போலீசார் அந்த வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டிற்கு அரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்தன்று பூட்டி இருந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து வீட்டின் முன் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அதைதொடந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து நகைகளும் மீட்டகப்பட்டது. கொள்ளை குறித்து புகார் அளித்த 3 மணி நேரத்தில் மோப்ப நாய் அர்ஜூன் உதவியால் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஜோதிலட்சுமியை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார். செல்போன் திருடிய பெயின்டர் கைது: அம்பத்தூர், ஐசிஎப் காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன் (33). தனியார் நிறுவனத்தில் ஊழியர். இந்நிலையில், நேற்று அதிகாலை நடராஜன் வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார். பின்னர், அவர் அங்கிருந்து செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த நடராஜன் “திருடன், திருடன்” என சத்தம் போட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தப்பி ஓட முயன்ற திருடனை விரட்டி பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருமங்கலம், பாடிபுதுநகர், கலைவானர் காலனியைச் சேர்ந்த சிவா (20) பெயின்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : robber , Cheat dog, help, 3 hours, caught, robbed
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது