×

மாநகர பேருந்தில் கலாட்டா தட்டிக்கேட்ட டிரைவர்களுக்கு அடி உதை: போதை ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மாநகர பேருந்தில் கலாட்டாவில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட டிரைவர்களுக்கு, சரமாரியாக அடி உதை விழுந்தது. இந்த சம்பவத்தால் ஜாம்பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு (தடம் எண்:25 ஜி) மாநகர பேருந்து புறப்பட்டு சென்றது. இதில் குடிபோதையில் 5 பேர் கொண்ட கும்பல் ஏறினர். பேருந்து ஜாம்பஜார் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, போதையில் இருந்த 5 பேரும் பேருந்தை தட்டி பாட்டு பாடி கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனை பஸ் டிரைவர் சரத்குமார் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும், டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் டிரைவர் பேருந்தை எடுக்காமல் பாதி வழியிலேயே நிறுத்தினார். அப்போது பூந்தமல்லியில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி வந்த மற்றொரு மாநகர பேருந்து அந்த வழியாக வந்தது. டிரைவரை மர்ம கும்பல் தாக்குவதை பார்த்த டிரைவர் பிரபு பேருந்தை நிறுத்திவிட்டு மர்ம நபர்களை தடுக்க முயன்றார். ஆனால் போதை ஆசாமிகள் விலக்க வந்த டிரைவர் பிரபுவையும் சரமாரியாக அடித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய நபர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டான். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தாக்குதலில் படுகாயமடைந்த ஓட்டுநர்கள் சரத்குமார், பிரபு ஆகியோர் கொடுத்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஜாம்பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bus drivers ,Galatta , Municipal Bus, Galata, Driver, Footsteps, Drug Assami Web
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது