×

சமையல் செய்வதில் தகராறு மாமியாரை கத்தியால் குத்திய மருமகள் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அர்ச்சனா (28). நேற்று காலை பார்த்தசாரதி வேலைக்கு சென்று விட்டார். அர்ச்சனா மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது சமையல் செய்வது தொடர்பாக அர்ச்சனாவுக்கும், அவரது மாமியார் லட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது குடுமிப்பிடி சண்டையாக மாறி இருவரும் கட்டிப்புரண்டனர். ஆத்திரமடைந்த அர்ச்சனா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமியாரின் தலையில் குத்தினார்.
 
லட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து காயமடைந்த லட்சுமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாமியாரை மருமகள் கத்தியால் குத்திய சம்பவம் எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Daughter-in-law ,mother-in-law ,Stabbing , Arresting, disputing, in-laws, knife, stab, niece, arrest
× RELATED மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு மருத்துவமனையில் சீரியஸ்