×

மாற்றுத்திறனாளி மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற தாய்: இருவரும் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம், விநாயக் நகரில் வசிப்பவர் சுல்தான் பேகம்(40). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்த சுல்தான் பேகம் தனது தாய்வீடான விநாயக் நகரில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு பழக்கமான ஆட்டோ டிரைவர் இஸ்மாயில்(45) என்பவருடன் சுல்தான் பேகத்துக்கும் தொடர்பு நீடித்தது. இதையடுத்து அடிக்கடி இஸ்மாயிலை தனது வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்து வந்தாராம். இதேபோல் கடந்த 22ம் தேதி மாலை தனது பெற்றோர்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பிய சுல்தான் பேகம், இஸ்மாயிலை வழக்கம்போல் வீட்டிற்கு வரவழைத்தார். இதற்கிடையே சுல்தான் பேகத்தின் 2 மகன்களும் வெளியே சென்ற நிலையில், இளையமகன் மாற்றுத்திறனாளியான அஜ்மத் வீட்டிலேயே இருந்தார்.

அஜ்மத் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாக கருதிய சுல்தான் பேகம், இஸ்மாயிலுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் போலீஸ் அவசர எண்ணான 100க்கு போன் செய்து தனது மகனை யாரோ கொலை செய்து விட்டதாக சுல்தான் பேகம் புகார் தெரிவித்தார்.  இதையடுத்து அங்கு வந்த மயிலார்தேவ்பல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்ய கவுடு சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். அப்போது, அக்கம்பக்கத்தினர் அஜ்மத் கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், இஸ்மாயில் வந்து செல்வது குறித்தும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் இஸ்மாயிலை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சுல்தான் பேகத்துடன் உள்ள கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் 2 பேரும் சேர்ந்து அஜ்மத்தை கழுத்து நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுல்தான் பேகத்தின் கணவர் ஹாஜி, கள்ளத்தொடர்புக்காக பெற்ற மகனையே மாற்றுத்திறனாளி  என்று கூட பார்க்காமல் கொலை செய்த சுல்தான் பேகத்திடம் இருந்து தனது இரண்டு மகன்களையும் மீட்டு தர வேண்டும் என தெரிவித்தார்.  இதையடுத்து போலீசார் 2 மகன்களையும் ஹாஜியிடம் ஒப்படைத்தனர். பின்னர், சுல்தான் பேகம், இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர்.



Tags : stepfather ,Counterfeiters , Arrested son of son, counterfeit lover, mother, arrested
× RELATED திருச்சி அருகே கள்ள நோட்டு தயாரித்த 5...