×

சுதந்திரத்திற்காக நாம் போராடியது போல் தற்போது போராடுவது உகந்தது அல்ல: நடிகை கங்கனா ரணாவத் கருத்து

மும்பை: ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுவது சரியானதல்ல என இந்தி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். நாட்டில், பசி  பட்டினி போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், ரயில், பேருந்து போன்றவற்றில் கற்களை வீசுவதும், அவற்றை எரித்து வன்முறையில் ஈடுபடுவது  என்றைக்கும் தீர்வாகாது என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, முதலில் நீங்கள் வன்முறையில் ஈடுபடாதீர்கள். எங்கள் மக்கள் தொகையில், 3-4% பிபிஎல் வரி செலுத்துகின்றன. மற்றவர்கள் உண்மையில் அவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். எனவே, பேருந்துகள், ரயில்கள் எரிக்க மற்றும் நாட்டில் முரட்டுத்தனத்தை உருவாக்குவதற்கான  உரிமையை உங்களுக்கு யார் தருகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

சுதந்திரத்திற்காக நாம் போராடியது போல் தற்போது நாம் போராடுவது உகந்தது அல்ல என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுவது  குறித்து கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Kangana Ranawat , It is not appropriate to fight for the present as we have fought for independence: Actress Kangana Ranawat
× RELATED கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட்