×

ஜப்பானை அதிரவைத்த பாலியல் வழக்கு: தொலைக்காட்சி நிருபருக்கு 3.3 மில்லியன் அபராதம் விதித்தது ஜப்பான் நீதிமன்றம்

டோக்கியோ: ஜப்பானில் பாலியல் பலத்தகார வழக்கில் பெண் செய்தியாளருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு ஒளிபரப்பு துறையில் உள்ள முக்கிய நபரான நோரியுகி யமாகுச்சி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு தம்மை ஒரு விருந்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக டோக்கியோ பெண் செய்தியாளர் ஷியோரி இட்டோ என்பவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த புதன் கிழமை அடிரடி தீர்ப்பு வழங்கியது. டோக்கியோ மாவட்ட நீதிபதி, 53 வயதான யமாகுச்சிக்கு 30000 டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஜப்பான் பாலியல் வழக்கில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை வரவேற்ற பெண் செய்தியாளர் ஷியோரி இட்டோ இத்தகைய சாதகமான தீர்ப்பு வியப்பளிப்பதாக குறிப்பிட்டார். பெண் செய்தியாளர் தனக்கு நேர்ந்த கதியை புகாராக அளித்த போது அந்த சம்பவம் எப்படி நடந்தது என விளக்கம் அளிக்க  சொன்னது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் ஷியோரி தெரிவித்தார்.       



Tags : court ,Japan ,television reporter Television reporter , Japan Court of Fines, Judgment, Sex Case
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...