×

சிண்டிகேட் வங்கி சார்பில் வாராக்கடன் முகாம்

சென்னை: சிண்டிகேட் வங்கியின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சிண்டிகேட் வங்கி தனது அனைத்து கிளைகளிலும் இன்று (24ம் தேதி) ‘பாரத் சிண்ட் அதாலத் 3’ என்ற பெயரில், வாராக்கடன் கணக்குகளை உடனடியாக அந்தந்த கிளைகளிலேயே தீர்வு செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கிளைகளை நேரில் அணுகி, வாராக்கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Credit Camp ,Syndicate Bank , Credit Camp ,behalf of Syndicate Bank
× RELATED சிண்டிகேட் வங்கி லாபம் 4 மடங்காக உயர்வு