×

கள் இறக்க அனுமதி கோரி ஜன. 21ல் போராட்டம்

திருச்சி: தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி திருச்சியில் அளித்த பேட்டி: தமிழகத்தில் 30 வருடமாக கள்ளுக்கு தடை உள்ளது. ஜல்லிக்கட்டு கொண்டு வருவதற்கு நடத்திய இயக்கம் போல கள் கொண்டு வருவதற்கும் இயக்கம் நடத்தப்படும். மது கொள்கையில் உலகளாவிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது, டாஸ்மாக் மது வகைகளை தமிழகத்தில் அனுமதிக்கிறார்கள். கள்ளுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை. கள் விற்பனையை அனுமதிக்க தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜனவரி 21ல் அறப்போராட்டம் நடக்கிறது. இவ்வாறு நல்லசாமி கூறினார்.


Tags : Jan ,Mat , Tamil Nadu Operations Leader, Nallasamy, Trichy
× RELATED புதுகையில் பாதிரியார் வீட்டில் நகை...