×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி...ஸ்டாலின், பிரதமர் மோடி வாழ்த்து: ரகுபர் தாஸ் ராஜினாமா

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது. கனிமவளங்கள் நிறைந்த மாநிலமான ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர் நண்பகல் முதல் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக முன்னிலை பெற்று முன்னேறியது.

மாலை 6.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் 3, தொகுதிகளிலும் மற்றவை 7 இடங்களில் வென்றுள்ளன. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதையடுத்து, அக்கட்சிகளின் தொண்டர்கள் டெல்லியிலும், ராஞ்சியிலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிக இடங்களில் போட்டியிட்டு, கூடுதல் இடங்களை வென்றிருப்பதால், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராவார் என ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின், பிரதமர் மோடி வாழ்த்து


ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த்சசோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக இவ்வளவு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கும் நன்றி. மேலும் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ரகுபர் தாஸ் ராஜினாமா


ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்ததையடுத்து அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை, கவர்னர் திளெபதி மும்முவிடம் அளித்தார். ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிட்டது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி மொத்தம் உள்ள 81 இடங்களில் 47 இடங்களை வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனிடையே ரகுபர் தாஸ் சுயேட்சை வேட்பாளர் சர்யு ராயிடம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜாம்ஜெட்பூர் கிழக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். தங்கள் கட்சி ஜெயிக்கும் இன்று இறுதிவரை நம்பிக்கொண்டிருந்த ரகுபர் தாஸ் கடைசியில் அவரும் தோல்வி அடைந்திருப்பது பாஜகவினரிடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags : Congress ,Jharkhand Congress ,Jharkhand Mukti Morcha Coalition Reigns ,Jharkhand , Jharkhand, Congress, Jharkhand Mukti Morcha, Stalin, Prime Minister Modi, Raghubar Das resign
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...