×

குடிநீர் பைப்லைனை உடைத்ததால் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்: ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் பைப்லைனை உடைத்ததால் பாலம் கட்டுமான பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மண்டவாடி ரோடு புதூரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நீண்டகாலமாக தரைப்பாலம் இருந்து வந்தது. இதை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பாலத்தை அகற்றும் போது குடிநீர் பைப்லைன் உடைந்துவிட்டது.

இதனை சரிசெய்து தரும்படி ஒப்பந்ததாரரிடம் பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. பல இடங்களில் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தண்ணீர் வீணாக சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திரண்டு கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய பைப்லைன் அமைத்து தரப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனனர்.

Tags : Otanasattaram , Drinking water, building bridge, fighting, camel
× RELATED கோடை விடுமுறைக்கு பிறகு...