×

40 லட்சம் லைக்குகளை அள்ளிய கார்ட்டூன்!

நன்றி குங்குமம் முத்தாரம்

அனிமேஷன் படங்கள் என்றாலே வால்ட் டிஸ்னிக்கு தனி இடம் உண்டு. இன்று அனிமேஷனில் 3 டி, வெர்ச்சுவல் ரியாலிட்டி, மோஷன் காப்ச்சூர் என வகைவகையாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. வனவிலங்குகளை அப்படியே தத்ரூபமாக அனிமேஷன் செய்கின்றனர். நிஜத்தையும் அனிமேஷனையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி  அசலாக அனிமேஷன்கள் நம்மை வசீகரிக்கின்றன. ஆனால், ஹாலிவுட்டில் முப்பதுகளிலேயே கார்ட்டூன் படங்கள் வந்திருக்கின்றன.

அப்போது ஒவ்வொரு கார்ட்டூன் கேரக்டரையும், அதன் நுட்ப அசைவுகளையும் கையில் ஓவியங்களாக வரைந்து படமாக்கியுள்ளனர். இப்படி வரைந்து அனிமேஷன் செய்யப்பட்ட அரிய காட்சிகளை எல்லாம் தொகுத்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறது ஃபேஸ்புக்கின் ‘Nostalgia’ என்கிற பக்கம். ‘So much work. but so worth it’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ 40 லட்சம் லைக்குகளைத் தாண்டி வைரலாகிவிட்டது.

Tags : 40 Million Like, Cartoon!
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...