×

சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க கண்டலேறு அல்லது சோமசீலா அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு?

* ராட்சத பைப் லைன் அமைக்க திட்டம்
* முன்வரைவு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை: சென்னை மக்களின் குடிநீருக்கு கண்டலேறு அணை அல்லது சோமசீலா அணையில் இருந்து ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக முன் வரைவு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் ேதவைக்காக தெலுங்கு கங்கா திட்டப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் ெகாண்டு வருவது தொடர்பாக கடந்த 1983ல் தமிழக அரசு-ஆந்திர அரசு இடையே ஒப்பந்தம் ேபாடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தர வேண்டும். கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீரை ஆந்திரா எல்ைலயோர கால்வாய்களில் விவசாயிகள் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை திருடிவிடுகின்றனர். இதனால், தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் 600 கன அடி நீர் கூட தமிழக எல்லைக்கு வருவதில்லை.

இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் புகார் அளித்தால் கூட அம்மாநில அரசால் தண்ணீர் திருட்டை தடுக்க முடியாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய 12 டிஎம்சியில் பாதி டிஎம்சி தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைப்பதில்லை. இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் முழு நீரையும் தமிழகத்துக்கு ெகாண்டு வருவதற்கான மாற்று திட்டங்களை கொண்டு வர முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் முதற்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி தற்போது முன்வரைவு அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

அதில், ரூ6 ஆயிரம் கோடி செலவில் கண்டலேறு அணையில் இருந்து 10 அடி கொண்ட 6 ராட்சத பைப் மூலம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையிலான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரூ14 ஆயிரம் கோடி செலவில் சோமசீலா அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கேட்டு பொதுப்பணித்துறை அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் தனியார் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Kanthalengam ,Madras ,Somaseela Dam ,conductors ,DMK ,rally ,drivers ,MTC , Chennai, Drinking Water, Kandaleru, Somaseela Dam
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு