×

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? பரபரப்பு கருத்துக் கணிப்பு முடிவுகள்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 20ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதை காட்டுகின்றன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 42 இடங்களை பெற வேண்டும் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்  கணிப்புகள் மூலம் சராசரியாக காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இப்போதைய ஆளும் பாஜ 22 முதல் 32 இடங்களில் வெற்றிக் பெறக்கூடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே மற்றும் மேக்சிஸ் கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி 50 இடங்கள் பிடிக்கும் என்றும், பாஜ கூட்டணிக்கு 32 இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சி-ஓட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தொங்குபேரவை அமையும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணிக்கு 35 இடங்களும், பாஜ.வுக்கு 32 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தொங்கு பேரவை  அமைந்தால், ஆட்சி அமைப்பதில் இழுபறியும், குதிரை பேரமும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Jharkhand , Jharkhand, opinion poll
× RELATED ஜார்கண்டில் 5 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை