×

U14 கிரிக்கெட்டில் 295 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டின் மகன்; பந்து வீச்சிலும் அசத்தல்

பெங்களூரு: ராகுல் டிராவிட் இந்திய தடுப்புச்சுவர் என்று அனைவராலும் கருதப்பட்டு இந்தியா கண்டெடுத்த சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள்போட்டியென இரண்டிலும் 10,000+ ரன்களை எடுத்த சில கிரிக்கெட் வீரர்களில் டிராவிட் ஒருவர்.அவருடைய மிக நுணுக்கமாக ஆட்டத்திறனும், ஆட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் என எதிரணியை அணி விரர்களை கலங்கடித்தார்‌. 2000 ஆம் ஆண்டுகளில் சேவாக், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோருடன் டிராவிடும் இந்திய அணிக்கு ஒரு தூணாக இருந்தார். இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்தாரோ, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், அதே உழைப்பை தொடர்ந்து வருகிறார்.

அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகியஅணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து பிரித்வி ஷா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல அபாரமான திறமைசாலிகளை செதுக்கி இந்திய அணிக்கு அனுப்பினார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அவரை போலவே மிகப்பெரிய வீரராக வருவதற்கான அனைத்து அடையாளங்களுடனும் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.

கர்நாடகாவில் நடந்த அண்டர் 14 மண்டல அளவிலான போட்டியில் வைஸ் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் ஆடிவரும் சமித் டிராவிட், தர்வாத் மண்டல அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 250 பந்தில் 201 ரன்களை குவித்த சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 295 ரன்களை குவித்தார் சமித் டிராவிட். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்ட சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மித வேகப்பந்து வீச்சாளரான சமித் டிராவிட், பவுலிங்கிலும் அசத்துகிறார். இந்த போட்டி டிராவில் முடிந்தது.

Tags : Rahul Dravid ,Bowling ,Batting ,Cricket ,Samit Dravid , Rahul Dravid, Samit Dravid, Cricket, Batting, Bowling
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...