×

டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்

மும்பை: டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா அதிகளவில் பந்துவீச வேண்டும் என இந்திய கேப்டன் ரோஹித், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுலிங்கில் அவர் மீண்டும் பழைய ஃபார்ம்க்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிசிசிஐ கவனம் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை பக்கம் திரும்பியுள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாகவும், ஹர்திக் பாண்டியாவை சேர்ப்பது குறித்து முக்கிய விவாதம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர்களுக்கான இந்திய அணியின் தேடலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதன்மைத் தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவரது மோசமான ஆட்டம் அணி நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது. அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்டு, ஹர்திக் பேட் மற்றும் பந்தில் எதிர்பார்ப்புகளுக்கு விளையாட தவறியுள்ளார். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளதால் அவரது கேப்டன்ஷிப் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை விளையாடிய ஹர்திக் 6 போட்டிகளில் நான்கில் பந்து வீசியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீசினார், அடுத்த இரண்டு போட்டிகளில் பந்து வீசவில்லை. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்குஎதிராக ஒரு ஓவர் வீசினார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பந்து வீசினார்.

ஓவருக்கு 12.00 என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக்கொடுத்து, வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் ஹர்திக் 26 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதில் தோனி மூன்று தொடர்ச்சியான சிக்ஸர்கள் விளாசினார். அந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பில் பாண்டியாவின் பந்துவீச்சு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா அதிகளவில் பந்துவீச வேண்டும் என இந்திய கேப்டன் ரோஹித், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுலிங்கில் அவர் மீண்டும் பழைய ஃபார்ம்க்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மீதும் இந்திய அணியின் தேர்வு குழுவினர் ஒரு கண் வைத்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஷிவம் துபே ஒரு பந்துகூட வீசவில்லை என்பதால் ஹர்திக் பாண்டியனை தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : IPL ,T20 World Cup ,Rohit ,Pandya ,Mumbai ,Rahul Dravid ,Hardik Pandya ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...