×

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி அபிநந்தன் சாக்லெட் சிலை

புதுச்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் புதுச்சேரியில் அவரது உருவத்தில் 341 கிலோ சாக்லெட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தாண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா நடத்திய பதில் தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டபோதும், தைரியத்துடன் செயல்பட்டவர் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன். அவரது செயல்பாட்டினை  அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர். தற்போது இவரை கவுரவிக்கும் வகையில் புதுச்சேரியில் இந்தாண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 341 கிலோ சாக்லெட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அபிநந்தனின் உருவம் சாக்ேலட்டால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 அடி உயரமும், 10 அங்குலமும் கொண்ட இந்த சாக்லெட் சிலை பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாக்லெட் மூலம் செய்யப்பட்டுள்ளது.

சாக்லேட் கேக்குகளில் விதவிதமாக புதுமை செய்யும் புதுவை காந்தி வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்த சாக்லெட்டை உருவாக்கி உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரின் 124 மணி நேர உழைப்பினால் உருவான இந்த சாக்லெட் சிலை பொதுமக்களின் பார்வைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் பார்த்து ரசித்து செல்கின்றனர். ஏற்கனவே இவர் காந்தியடிகள், சுதந்திர தேவி சிலை, மிக்கி மவுஸ், அப்துல் கலாம் போன்ற சாக்லெட் சிலைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Christmas , Apinantan
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...