×

டாஸ்மாக் பாரில் வியாபாரிக்கு சரமாரி வெட்டு: வாலிபர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த  சண்முகபுரம், பாரதிதாசன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (38). மெத்தை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சிவப்பிரகாசம் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.  அப்போது, இவரது அருகில் அமந்து மது அருந்திய அதே பகுதி, 1வது தெருவை சேர்ந்த நிக்கோலஸ் (38) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு சென்ற நிக்கோலஸ், கத்தியை எடுத்து வந்து, சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.  படுகாயமடைந்த சுரேஷை பார் ஊழியர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிக்கோலசை கைது செய்தனர்.

„ அமைந்தகரை மேத்தா நகர் கூவம் ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மண் திருடிய வாணியம்பாடியை சேர்ந்த சரவணன் (31), இன்பம் (27), மதுரவாயலை சேர்ந்த ரவிக்குமார் (31), விழுப்புரத்தை சேர்ந்த மறவன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். „ அமைந்தகரையில் இறுதி ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஈஸ்ட் கிளப் ரோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் ராஜா (26) என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

„  புறநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புழல் காரனோடை, விஜயலட்சுமி நகரை சேர்ந்த பாலன் (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புளியந்தோப்பை சேர்ந்த ரவி என்பவர் குறிப்பிடும் நபர்களுக்கு இவர் கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரிந்தது. தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த 8ம் தேதி மிரட்டல் விடுத்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சீனிபாபு (23) என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.   விசாரணையில் இவர், தனது நண்பருடன் அந்த திரையரங்கில் படம் பார்க்க மது போதையில் வந்தபோது, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.



Tags : Defendant ,dealer ,bar ,Tasman , Tasman bar, dealer, cut, youth arrested
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்