×

100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் முதலிடத்தில் கோஹ்லி, 13வது இடத்தில் ரஜினிகாந்த்: ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அஜித்தும் இடம் பிடித்தனர்

மும்பை: ஃபோர்ப்ஸ்  பத்திரிகையில் இந்தியப் பிரபலங்கள் 100 பேரின் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அஜித் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டு தோறும் உலகில்  பல்வேறு  துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை  வெளியிட்டு வருகிறது. இப்போது 2019ம் ஆண்டுக்கான பட்டியலை  வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்களின் ஆண்டு வருமானம், புகழ்  மற்றும் சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பு ஆகியவற்றை முன்வைத்து 100 பேர்  பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 252.72 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்  கோஹ்லி. நடிகர்களில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமானம்  ஈட்டி, புகழின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். சல்மான் கான் ரூ.229.25 கோடி வருமானத்துடன் 3வது இடம் பிடித்துள்ளார்.

அமிதாப்பச்சன் ரூ.239.25  கோடி, மகேந்திர சிங் டோனி ரூ.135.93 கோடி  என 4வது மற்றும் 5வது இடம்பிடத்துள்ளனர். ஷாருக்கான் (ரூ.124.38 கோடி) 6வது  இடத்திலும் அவரை தொடர்ந்து ரன்வீர் சிங் (ரூ.118.2 கோடி), அலியா பட் (ரூ.59.21  கோடி), சச்சின் தெண்டுல்கர் (ரூ.76.96 கோடி), தீபிகா படுகோன் (ரூ.48 கோடி)  ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழ் நடிகர்களில்  ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். 16வது இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், 27வது இடத்தில் மோகன்லால், 44வது  இடத்தில் பிரபாஸ், 47வது இடத்தில் விஜய், 52வது இடத்தில் அஜித், 54வது  இடத்தில் மகேஷ் பாபு, 55வது இடத்தில் இயக்குநர் ஷங்கர், 56வது இடத்தில்  கமல்ஹாசன், 62வது இடத்தில் மம்மூட்டி, 64வது இடத்தில் தனுஷ், 77வது  இடத்தில் இயக்குநர் த்ரிவிக்ரம், 80வது இடத்தில் இயக்குநர் சிவா மற்றும்  84வது இடத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர்.

Tags : Kohli ,Rajinikanth ,Ajith ,Vijay ,AR Rahman , 100 Indian celebrities, Kohli, Rajinikanth, AR Rahman, Vijay, Ajith
× RELATED சென்னையில் கஞ்சா வாங்குவது போல் நடித்து கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ்