×

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லாட்டரிகளுக்கு 28 சதவீதம் வரை ஜி. எஸ்.டி. வரி

புதுடில்லி: 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லாட்டரிகளுக்கு 28 சதவீதம் வரை ஜி. எஸ்.டி. வரி விதிக்கப்பட உள்ளது. புதுடில்லியில் 38-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருவாய்துறை செயலாளர் ஏ.பி.பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் மார்ச் மாதம் முதல் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள லாட்டரிகளுக்கு 28 சதவீதம் அளவிற்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Lottery, g. S.D. Line
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...