×

ஊரக உள்ளாட்சி தேர்தல் தினத்தில் 20 மணிநேரத்துக்கு முன்பு போலீசார் வாக்குசாவடியில் இருக்க வேண்டும் : தேர்தல் கமிஷன் உத்தரவு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்கு 20 மணிநேரத்துக்கு முன்பாக வாக்குசாவடியில் போலீசார் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாநில ேதர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீசார் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவிற்கு 20 மணி நேரத்திற்கு முன்னர் ஆஜரில் இருக்க வேண்டும். வாக்குச் சாவடியில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மின் விளக்கு வசதி செய்யப்பட்டு, வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உட்பட மற்ற பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரத்தில் வாக்குச் சாவடியை பாதுகாக்க வேண்டும்.
வாக்குச்சாவடியை சுற்றி சின்னங்கள், கொடிகள் உள்ளதா என்பதை பார்த்து, இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஆண், பெண் வாக்காளர்களை தனித்தனியே வரிசைப்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச் சாவடிக்குள் ஒழுங்கை பாதுகாக்க உதவ வேண்டும்.சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் எந்த மொபைல் குழு, அதிரடிக்குழு, போலீஸ் நிலையத்துக்கு தகவல் தர வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு பெட்டிகளை உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்லும் வரை வாக்குச்சாவடி பணியில் காவல் இருக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது. வரிசையில் உள்ள வாக்காளர்களை எந்த கட்சியினரும் சென்று வாக்கு கேட்க அனுமதிக்க கூடாது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் நடுநிலையுடன் செயல்படுவதை, மற்றவர்கள் உணரும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rural Local Election Day ,Election Commission , Police .ballot .20 hours before .local election day
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...