×

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி குரங்கு என்று எப்படி சொல்லலாம்?: சவுதி நடுவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்.) கால்பந்து போட்டி தொடரில் பெங்களூருவில் காந்தீராவா ஸ்டேடியத்தில் நடந்த 39வது லீக் ஆட்டத்தில் மும்பை  சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த போட்டி முடிவில் மும்பை சிட்டி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா பத்திரிகையாளர் மத்தியில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ‘மும்பை சிட்டி அணியின் வீரர் செர்ஜி கெவினை பார்த்து போட்டியின் போது சவுதி அரேபியாவைச் சேர்ந்த நடுவர் துர்கி அல்குதார் ‘குரங்கு’ என்று திட்டி இருக்கிறார். குரங்கு போன்று சைகைகளையும் செய்து காட்டினார்.

இதுபோன்ற செயல்களை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.  என்னால் கண்களை மூடிக்கொள்ள முடியாது. வெளிநாட்டு வீரர்களை மதிக்க  வேண்டும். இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போட்டி அமைப்பாளர்கள் வலியுறுத்த வேண்டும்’  என்று தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்எல் விதிகளின்படி, இதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் ஏஐஎப்எப்-இன் ஒழுக்காற்றுக் குழுவால் தீர்க்கப்படுகின்றன. கெவின்  ஆப்பிரிக்க நாடான காபோனைச் சேர்ந்தவர். அவர் ஐஎஸ்எல் கிளப்பின் மிட் பீல்டராக விளையாடுகிறார். மும்பை சிட்டி எஃப்சி நடப்பு சாம்பியனான பெங்களூரு  எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Indian Super League ,football rival ,Saudi ,football rivalry ,referee , Indian ,Super League, football ,rivalry?
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை