×

தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்

பெஷாவர்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப். இவர், பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த 1999ல் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முந்தைய பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்),

முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் மீது அந்நாட்டு அரசு தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது. அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. அவர் மீதான வழக்கு பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

நீதிபதி யவார் அலி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணை செய்தது. விசாரணை முடிந்த நிலையில், முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதனிடையே உடல்நலக் குறைவால் தற்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pervez Musharraf ,court ,Pakistani ,treason Treason ,Pakistan Special Court , Treason Case, Parvesh Musharraf, Execution, Pakistan Special Court
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...