×

பொள்ளாச்சி அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி மாமியார் தலையை கடித்து குதறிய மருமகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி மாமியாரின் தலையை கடித்து குதறிய மருமகளை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள மின் நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரி (62), பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார், மனைவி கல்பனாவுடன் (42) சின்னாம்பாளையத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மருமகள் கல்பனாவுடன் ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், மாமியார் நாகேஸ்வரி புகாரின்படி பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்தி வந்தார். இது தொடர்பாக, கடந்த இரு வாரத்திற்கு முன்பு சரவணக்குமாருக்கும், கல்பனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த சரவணகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த கல்பனா, இரு நாட்களுக்கு முன்பு, மின்நகரில் வசித்து வரும் மாமியார் நாகேஸ்வரியின் வீட்டிற்கு சென்றார். எனது கணவர் சரவணக்குமாரை எங்கு வைத்துள்ளீர்கள்? என கேட்டதுடன், என் மீது போட்ட  வழக்கை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே கைகலப்பானது. அப்ேபாது கல்பனா, நாகேஸ்வரி தலையின் ஒரு பகுதியை கடித்து குதறினார். அவர் வலி தாங்க முடியாமல் அலறியபடி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடினார். அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது. இது தொடர்பாக நாகேஸ்வரி, மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கல்பனாவை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Mother-in-law ,Pollachi ,nieces ,nephews , Pollachi, mother-in-law's head, bites , nieces , nephews
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...