×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து ரூ. 28,976 விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. இன்று திடீரென தங்கம் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (டிசம்பர் 14) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 22 ரூபாய் உயர்ந்து 3,622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,600 ஆக இருந்தது.அதேபோல, 28,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,976 ரூபாயாகக் அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு 88 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

வெள்ளியின் விலை!

சென்னையில் வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.30 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,300 ஆக இருக்கிறது.


Tags : Chennai , Sales, Silver, Jewelery, Gold, shaving, g
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...