×

ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டிங் ஆன ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று தான் ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு வாழ்த்து கூற இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர்.

இது தவிர சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

பட பூஜையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்:


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 168 பட பூஜை நேற்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டது. அதனோடு சூப்பர்ஸ்டார் பர்த்டேவும் சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்ளிப்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் வாழ்த்து:


எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஜினி நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Birthday ,Rajini ,Birthday Celebrated Worldwide ,MK Stalin , Twitter, Trending, Rajini, Birthday, MK Stalin
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி