தண்ணீரில் மூழ்கி முதியவர் பலி

சென்னை: குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் திருமலை நகரை சேர்ந்த பாண்டியன் (61), காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்று, அங்கு அமர்ந்து மது அருந்தினார். குடிபோதையில் நிலைதடுமாறி அருகில் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் விழுந்ததில் அவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.
* அரியலூர் மாவட்டம் சீக்கியபுரம், சிவானந்தம் நகரை சேர்ந்த பிரேம்குமார் (23), தாம்பரத்தில் தங்கி அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று திருநீர்மலை அருகே பைக்கில் சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
*  மண்ணடி வன்னியர் தெருவை சேர்ந்த யூசப் (57), ேநற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து அண்ணாசாலை வழியாக மன்றோ சிலை நோக்கி பைக்கில் சென்றபோது, எதிரே வந்த மொபட் இவர் மீது மோதி படுகாயமடைந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை சிகிச்சை
பலனின்றி இறந்தார்.
* விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன்(49). மருந்து விற்பனையகசேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். குன்றத்தூர் அருகே  சர்வீஸ் சாலையோரம் கடையில் தண்ணீர் குடிக்க வண்டியை நிறுத்தினார். அப்போது, அவருக்கு பின்னால் குன்றத்தூர் நோக்கி அசூர  வேகத்தில் வந்த சொகுசு கார் லோகநாதன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Water, old man kills
× RELATED கருணை இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மனநலம் பாதித்தவர்