×

கோபிச்செட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி: அய்யம்பாளையத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

கோபிச்செட்டிபாளையம்: கோபிச்செட்டிபாளையம் அருகே அய்யம்பாளையத்தில் வார்டு வரையறையில் குளறுபடி நடந்திருப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பாளையத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் மொத்தம் 20,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒன்றாவது வார்டில் மட்டும் 1,443 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், கடந்த 2011 தேர்தலுக்கு முன்பு வரை கலைவாணர் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். தற்போது, வார்டு வரையறை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் வகையில் குளுறுபடி நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வார்டு வரையறை குளறுபடியால் ஒரே குடும்பத்தில் இரண்டு வாக்காளர்கள் ஒன்றாவது வார்டிலும், இரண்டு வாக்காளர்கள் 4வது வார்டிலும் வாக்களிக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வார்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் வரையறை செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு ஆகியவைகளை பின்பற்றாமல் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Ayyampalayam Gopichettipalayam ,Ward Definition , Gopichettipalayam, Ward Definition, mess, Ayyampalayam, road picket
× RELATED திருக்கழுக்குன்றத்தில் வார்டு வரையறையில் குளறுபடி: திமுகவினர் புகார்