×

பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடை வயல் பட்டறைகளில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்: ஏலத்தில் விடப்படுமா?... விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடியாளர்களை கொண்ட பூமியாகும். பெயரளவில் ஆறேழு ஆறுகள் இருந்தாலும், 90 சதவீதம் கிணற்றுப்பாசன விவசாயிகளை கொண்டு, பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இதனை கொண்டே பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் ஆகிய 3 பயிர் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் கடந்த10ஆண்டுகளுக்கு மேலாக முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக சின்ன வெங்காய சாகுபடிக்கு பெரம்பலூர் மாவட்டம் சிறப்பு பெற்றது. இங்கு செட்டிக்குளம் பிர்கா, கொளக்காநத்தம் பிர்கா, குரும்பலூர் பிர்கா, பெரம்பலூர், வெங்கலம் பிர்காக்கள் சின்ன வெங்காயத்தின் சொர்க்க பூமிகளாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் குறைந்த பட்சம் 7ஆயிரம் ஹெக்டேர் முதல் மிக அதிகப்பட்சம் 9 ஆயிரம் ஹெக்டேர் வரை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் வரை அறுவடை செய்யப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில் இங்கிருந்து மட்டும் 23 சதவீத வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது என் பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சின்ன வெங்காய சாகுபடியில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருந்தும் வெங்காயத்திற்கான விலையை நிர்ணயம் செய்ய முடியாத பரிதாபத்தில் தான் சின்ன வெங்காய விவசாயிகள் உள்ளனர். இதில் சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.4க்கு கொள்முதல் செய்த அவல நிலை அறிந்தே செட்டிக்குளத்தில் 1.976 ஏக்கர் பரப்பளவில் ரூ1.14 கோடி மதிப்பில், வேளாண் (விற்பனை மற்றும் வணிகம்) துறையின் கட்டுப்பாட்டில் கடந்த 2015ல் வெங்காய சேமிப்புக் கிடங்கும், ஏல மையமும் தொடங்கப்பட்டது. இருந்தும் ஓராண்டு கூட முழுமையாக செயல்படுத்தப்படாமல் அது முடங்கி கிடக்கிறது.

அதோடு வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றியமைக்கும் நவீன உணவு பதப்படுத்தும் மையம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக அதுவும் முடங்கித்தான் கிடக்கிறது. மற்றொரு ஏல மையமான ஒழுங்குமுறை விற்பனை கூடமும் மூடியே கிடக்கிறது. இதனால் ரத்தத்தை வியர்வையாக சிந்தி விளைவித்த விவசாயிகளால், அதற்கு விலை நிர்ணயம் செய்ய முடியாமல் வியாபாரிகளே நிர்ணயிக்கின்ற நிலைதான் உள்ளது. இதனால் அறுவடை செய்த சின்ன வெங்காயம் உரிய விலை கிடைக்காத காரணத்தால் கடும் வறட்சியிலும், மழையிலும், விளைந்த வயலிலேயே முதிர்கன்னிகளைப்போல் முக்காடிட்டு கிடக்கிறது. பயிரிட்டு அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்திடும் இயற்கை தொழில் நுட்பத்தை உலகிற்கே பறை சாற்றிய பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், உரிய விலை கிடைக்காத காலத்தில் பட்டறை கட்டிப்பாதுகாக்கவே முனைந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் விரும்புகிற விலை கிடைப்பதற்காக அமைக்கப்பட்ட பட்டறைகள் காலப்போக்கில் விதை வெங்காயத்திற்கும், வீடுகளில் வைப்பதற்கு இடமின்றியும் வயல்களில் பட்டறை அமைத்து பாதுகாக்கப்பட்டது. அந்த வழியில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வயல்களில் அறுவடை செய்த சின்ன வெங்காயம் பட்டறைகளில் தான் உள்ளது. நடப்பாண்டு முதலில் 3 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விட்ட நிலையில், அடுத்த கட்டமாக 3ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்ப ட்ட வெங்காயம் முக்கால் வாசி வளர்ந்துவிட்டது. இதனால் விதை வெங்காயத்தின் அவசியம் தற்போது ஏற்படவில்லை. அதே நேரம் உலக அளவில் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ள வெங்காயம் உச்சகட்ட விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இப்போது விற்காமல் பட்டறைகளில் முடங்கிக் கிடந்தால் அது பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் பட்டறையில் இருந்து 300 கிலோ மர்ம நபர்களால் திருடுபோனது போல் பல்வேறு ஊர்களில் திருடு போவதற்கே உடந்தையாக இருக்கும். பெரம்பலூர் உழவர் சந்தையில் தற்போது சின்னா வெங்காயம் கிலோ ரூ100க்கும், மார்கெட்டில் ரூ120க் கும், சென்னையில் 180க் கும் விற்கப் படுகிறது. இத னால் பட்டறையில் முடங் கிக் கிடக்கும் சின்ன வெங் காயத்தை விவசாயிகள் வெளியில் கொண்டுவந்து உழவர் சந்தையில் விற்பத ற்கு முன்வர வேண்டும். அல்லது செட்டிக்குளத்தில் மூடிக் கிடக்கும் ஏல மையத் தைத் திறந்து ஏலத்திற்கு விட மாவட்ட நிர்வாகம் ஏற் பாடு செய்ய வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடியாளர்களை கொண்ட பூமியாகும். பெயரளவில் ஆறேழு ஆறுகள் இருந்தாலும், 90 சதவீதம் கிணற்றுப்பாசன விவசாயிகளை கொண்டு, பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இதனை கொண்டே பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் ஆகிய 3 பயிர் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் கடந்த10ஆண்டுகளுக்கு மேலாக முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக சின்ன வெங்காய சாகுபடிக்கு பெரம்பலூர் மாவட்டம் சிறப்பு பெற்றது.

பட்டறையில் பதுக்கி வைக்க கூடாது
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா விடம் கேட்டபோது, சின்ன வெங்காயம் தற்போது மிக மிக அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலமெங்கும் இதற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேல் வெங்காயம் விற்பது விவசாயிகளுக்கு லாபத்தையே அள்ளித் தரும். பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காய சாகுபடியாளர்கள் வெங்காயத்தை பட்டறைகளில் பதுக்கி வைக்காமல் பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வந்தோ அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைத்தோ விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். செட்டிகுளம் ஏல மையத்தின் மூலம் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்யவும் துரித நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமான சின்ன வெங்காயத்தை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் பெரம்பலூர் மாவாட்ட தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்கவேண்டும்
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை தெரிவித்தாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளத்தில் ஒரு கோடிக்குமேல் செலவு செய்து கட்டப்பட்டு ஓராண்டுக்கு பிறகு பூட்டியே கிடக்கும் ஏல மையத்தை திறந்து ஏலத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயத்தை அதிகப்படியாக விற்பனை செய்ய வாய்ப்புகள் தர வேண்டும். அல்லது ஆந்திராவை போல் தமிழக அரசே பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்குக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளின் மூலமாக மானிய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : harvest field workshops ,Perambalur district ,auction ,district , Perambalur, Harvest Field Workshop, Little Onion
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...