×

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் புகழ்பெற்ற மணப்பாறை மாட்டு சந்தை களை இழந்தது: வியாபாரிகள் வருகை குறைவால் வெறிச்சோடியது

மணப்பாறை: ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் நகராட்சிக்கு வருவாய் ஈட்டி தந்த புகழ்பெற்ற மணப்பாறை மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவால் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல் மணப்பாறைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முறுக்குக்கு பெயர் போன ஊரில் மாட்டுச்சந்தைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. மருதகாசி ஒரு பாடலில் மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏர்பூட்டி என்று கூறியிருப்பார்.இவ்வளவு பெருமைகளை கொண்ட மணப்பாறை சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல்,கரூர், திண்டுக்கல்,தேனி,மதுரை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,சிவகங்கை என பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், வளர்ப்பு கன்றுகள் ,நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும்.

இது மட்டுமின்றி செவ்வாய் மாலை தொடங்கி புதன் கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் மணப்பாறை மாட்டு சந்தை தற்போது கால்நடை சந்தைகளுக்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கும், வெளி மாவட்டத்தினர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே குற்றச்சாட்டாக உள்ளது. ஆண்டுக்கு பலகோடி ரூபாய் வருவாயை ஈட்டி தரும் மணப்பாறை மாட்டு சந்தையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, இரவு நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் மட்டுமின்றி சுகாதார சீர்கேட்டாலும் எப்போதும் பரபரப்பாக களை கட்டி காணப்படும் மணப்பாறை மாட்டுச்சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் குறைந்த அளவிலான வருகையால் மாட்டு சந்தையின் புகழ் மட்டும் அல்லாது மாடுகளின் இனங்களும் நாளுக்கு நாள் குறைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு மாடுகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணி சொல்லும் அளவில் தான் இருந்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரிகளின் வருகை தொடர்ந்து பாதிக்கப்படும் சூழலில் விவசாயிகள் பலரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மாடுகளை போதிய விலையின்மையாலும்,

யாரும் கேட்க முன் வராதாலும் மன வேதனையுடன் திரும்பிக் கொண்டு செல்கின்றனர்.விவசாயிகள் தங்களின் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை தங்களுக்கு நேரும் அவசரத் தேவைகளின் போது அவற்றை விற்று தான் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் சமீப காலமாக சந்தைக்கு மாடுகளை விற்க வந்த பல விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க முடியாமல் திரும்பிக் கொண்டு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியாபாரிகளின் வருகையும் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் மனித தலைகளாக காட்சி அளிக்கும் மணப்பாறை மாட்டுச்சந்தை மாடுகளின் குறைந்த வருகையால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வர்த்தகமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான மணப்பாறை மாட்டுச்சந்தை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையில் உள்ள செவலூர் பிரிவு சாலை அருகே செயல்பட்டு வருகின்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை இந்த சந்தை நடைபெறும். சந்தை தொடங்குவதற்கு முன்பே வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து அணிவகுத்து நிற்பார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு வாகனமாக வந்து மாடுகளை இறக்கி விட்டுச் செல்லும். சில மணி நேரங்களில் சந்தை முழுவதும் எங்கு திரும்பினும் மனித தலைகளாகவும், மாடுகளாகவும் தான் காட்சி அளிக்கும். நாட்டு மாடு, சிந்து மாடு, ஜெர்சி மாடு, ஜல்லிக்கட்டு காளை, உழவு மாடு, வண்டி மாடு, எருமை மாடு, விதவிதமாய் விளையாடித் திரியும் கன்றுக்குட்டிகள் என பலவகையான மாடுகள் விற்பனைக்கு குவிந்திருக்கின்றது. உழவு மாடு வாங்க ஒரு பகுதியில் அலை மோதுகின்ற கூட்டம், வண்டி மாடு வாங்க மற்றொரு கூட்டம், ஜல்லிக்கட்டு காளைகள் வாங்க இளைஞர்கள் கூட்டம் ஒரு புறம், கறிக்கு மாடுகளை வாங்க ஓடும் ஒரு படை என அவரவர் வந்த வேலைகளில் மும்முரம் காட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மாட்டுச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

குறைந்த விலைகளில் தங்களுக்கு தேவையான மாடுகளை எளிமையாக வாங்கிட முடியும் என்பது தான் மணப்பாறை சந்தைக்கு உள்ள மற்றொரு சிறப்பு. பெரும்பாலோனார் மாடுகளை வாங்கி செல்வார்கள். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு சந்தைகளுக்கும் இங்கிருந்து தான் மாடுகளை வாங்கிக் கொண்டு விற்பார்கள். மாடுகளின் ரகத்திற்கு தகுந்தாற் போல் விலைகளும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. சுமார் ஆயிரத்தில் தொடங்கி 4 லட்சம் வரை மாடுகள் விற்பனை நடைபெறும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெறும் மணப்பாறை மாட்டுச்சந்தையில் சுமார் 5 கோடி வரை வியாபாரம் நடைபெறும். தீபாவளி, பக்ரீத் பண்டிகை என்றால் அந்த நேரங்களில் 4 முதல் 5 வாரங்களில் பன்மடங்கு விற்பனை அதிகரித்தே காணப்படுகின்றது. மாடுகளை ஏதோ கடையில் பொருட்களுக்கு விலை கேட்பது போல் கேட்டு வாங்கிச் சென்று விட முடியாது. ஒரு துண்டிற்குள் வாங்கும் நபரின் கையும், விற்கும் நபரின் கைகளும் ஜாலங்களில் பேசிக் கொள்ளும். மாட்டை விற்பவர் இதெல்லாம் கட்டாது என்று சொல்ல வாங்குபவர் போதும் விடுப்பா என்பார். ஆனால் அந்த ஜால மொழி அருகில் இருப்பவர்களுக்கு என்னவென்று தெரியாமல் திகைத்து போயிருப்பார்கள்.

பின்னர் தான் விரல் விலை பேசிக் கொண்டது என்பது புரியும். அருகில் உள்ளவர்களுக்கு என்ன விலைக்கு மாடு விற்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்க இந்த ரகசிய ஜால பேச்சுவார்த்தை நடைபெறும். இதன் காரணமாகவே பெரும்பாலானோரின் தோள்களில், தலையில் துண்டு காணப்படும். இந்த துண்டிற்கான ரகசியமும் விலைபேசுவதற்காகத் தான் என்பதை பலமுறை சென்றவர்களுக்கு தான் தெரியும். மாட்டிற்கு தேவையான தீவனங்களும் சந்தையின் உள்புறத்திலேயே கிடைக்கும். ஆனால் அவற்றிற்கும் தனிதனி தொகை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி மாட்டிற்கு தேவையான கயிறுகளும் சந்தையின் உள்பகுதிலேயே கிடைக்கும். மிகவும் புகழ்பெற்ற சந்தை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பலரும் நின்று வேடிக்கை பார்க்காமல் செல்ல முடியாது என்ற வகையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தே இருப்பதால் பார்த்து விட்டு தான் செல்கின்றனர். சில புதுமண தம்பதிகள் இங்கு வந்து தான் மாடுகளுக்கு தீவணம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கின்றனர்.

இந்த சந்தையைப் பொறுத்தவரை இரவில் மாடுகளை அழைத்துச் செல்ல அனுமதியில்லை என்பதால் செவ்வாய்கிழமை மாலையே மாட்டை வாங்கி விட்டாலும் புதன்கிழமை காலையில் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது வகுக்கப்படாத விதி. இதே போல் மாடுகள் உள்ளே கொண்டு செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் நகராட்சியின் சார்பில் ஏலம் எடுத்த ஒப்பந்தகாரர்களின் மூலம் வரி வசூல் செய்யப்படுகின்றது. அதற்கான தொகையை செலுத்தி விட்டுத் தான் சந்தைக்குள் மாடுகளை கொண்டு செல்ல முடியும். இதுமட்டுமின்றி மாடுகளை வெளியூரைச் சேர்ந்தவர்கள் வாங்கினாலும் கூட அவற்றை ஏற்றிச் செல்வதற்கான வாகன வசதிகளும் தயார் நிலையில் இருக்கும். எது எப்படி இருந்தாலும் மணப்பாறை நகராட்சிக்கு அதிக தொகையை பெற்றுத் தருகின்ற ஒரே சந்தை மணப்பாறை மாட்டுசந்தை தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை என்பது தான் அனைவரின் குமுறல்களாக ஒலிக்கின்றது.

சமீப காலமாக சந்தைக்கு மாடுகளை விற்க வந்த பல விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க முடியாமல் திரும்பிக் கொண்டு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியாபாரிகளின் வருகையும் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் மனித தலைகளாக காட்சி அளிக்கும் மணப்பாறை மாட்டுச்சந்தை மாடுகளின் குறைந்த வருகையால் வெறிச்சோடி காணப்படுகிறது. மணப்பாறை நகராட்சிக்கு அதிக தொகையை பெற்றுத் தருகின்ற ஒரே சந்தை மணப்பாறை மாட்டுசந்தை தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை என்பது தான் அனைவரின் குமுறல்

Tags : influx ,merchants ,Mohan Bhagwat ,RSS , The beef market, the merchants, are fed up
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...