×

ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்: முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு

காந்திநகர்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது.‌ உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது.‌ இந்த நிலையில் ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், டெல்லி அரசும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விஜய் ரூபானி கூறுகையில், ‘கும்பமேளாவில் கலந்துகொண்டு விட்டு திரும்புபவர்களை கண்காணிக்கவும், அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தங்கள் ஊர்களுக்குள் நுழைவதை தடுக்க சோதனைச் சாவடிகளை அமைக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கும்பமேளாவில் இருந்து திரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சோதனையின்போது வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்….

The post ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்: முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Haridwar ,Kumbh Mela ,Chief Minister ,Vijay Rupani ,Gandhinagar ,Haridwar, Uttarakhand ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...