×

14,500 என்ஜிஓ வெளிநாட்டு நிதி பெற தடை

புதுடெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 500 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இச்சட்டத்தின் கீழ் 1,808 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.


Tags : NGOs ,
× RELATED வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்:...